தினமும் இரவு எட்டு மணி அல்லது பத்து மணிக்கு இரவு உணவு சாப்பிட்டு விட்டு படுத்தால் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் கழித்துத்தான் காலையில் எழுகின்றோம். காலையில் எழுந்ததும் முதலில் சாப்பிடும் உணவைத்தான் ஆங்கிலத்தில் பிரேக்பாஸ்ட் என்று சொல்கின்றனர்.
முன் எப்போதையும் விட இந்த கொரோனா காலத்தில் உணவின் மீது மக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. மூன்று நேரமும் உணவகங்களில், ரெஸ்டாரெண்ட்கள், மெஸ்களில் உணவு சாப்பிட்டவர்கள் இப்போது பொது ஊரடங்கால் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். வீட்டு உணவின் ருசியையும் இப்போது உணரத் தொடங்கி இருக்கின்றனர்.
பெண்கள் சமைப்பதில் எப்போதுமே கில்லாடிகள். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள பெண்கள் சிலர் குழுவாக இணைந்து மாடியில் உணவகம் நடத்தி வருகின்றனர்.
காஃபி என்ற சொல் பல கோடி பேருக்கு புத்துணர்ச்சியளிக்கும் சொல். அதே போல காஃபி வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கோடி கணக்கான ரூபாய்களை குவிக்கும் தொழிலும் கூட. ஹாட் காஃபி, கோல்டு காஃபி என விதம் விதமான காஃபிகள் உலகம் முழுவதும் பல சுவைகளில் கிடைக்கின்றன. காபி வணிகம் பல கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனைகளைக் கொண்டது. மக்களின் ருசியை மூலாதாரமாக கொண்டு இயங்குகிறது காஃபி தொழில்.
நெல்லில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருள் அவல். நார்ச்சத்து மிக்க அவல் வெள்ளை, சிவப்பு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. வெள்ளை அரிசியில் இருந்து தயாரிக்கப்படுவது வெள்ளை அவல். வெள்ளை அவலில் நமது உடலுக்குத் தேவையான ஊட்டசத்துகள் நிறைய உள்ளன. கொழுப்பு சத்து குறைவாக உள்ளது.
கூகுள் தேடலில் ஈடுபடுபவர்கள் இனிமேல் உணவுகளையும் ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியும். இப்போது இந்தியாவில் உணவு டெலிவரி செய்வதற்கான பணிகளில் பரிசோதனை அடிப்படையிலான முயற்சியில் கூகுள் ஈடுபட்டிருக்கிறது.
அசைவ உணவுகள் ஆரோக்கியமற்றவை என்று முற்றிலும் ஒதுக்கிட முடியாது. அவற்றை சமைக்கும் முறையிலும், உண்ணும் முறையிலும்தான் ஆரோக்கியத்தின் அம்சங்கள் அடங்கி இருக்கின்றன.
சைவமோ,அசைவமோ எதையும் அளவோடு உண்டால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரத சத்து உள்ள உணவுகளை உட்கொள்வதுதான் முக்கியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆடிமாதம் தொடங்கி விட்டது. ஆடி காற்றின் காலமும் தொடங்கி விட்டது. ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். தூசியான காற்றை சுவாசிப்பதால் இருமல் போன்ற நோய்கள் வரலாம்.
50 வயதுக்கு மேலும் பலர் ஆரோக்கியமாக இருப்பார்கள். காரணம் அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவார்களாக இருப்பதுதான். ஆனால், இன்றைக்கு இளம் வயதிலேயே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுவதற்கு தவறான உணவுப் பழக்கங்கள்தான் முக்கிய காரணமாக இருக்கின்றன.
கொரோனா தொற்று மற்றும் தென்மேற்கு பருவமழை காலம்ஆகியவற்றின் காரணமாக இப்போது இருமல் மற்றும் சளி ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
கஞ்சி என்றாலும் அதை வீட்டில் தயாரித்து சாப்பிடுவது என்பதுதான் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழர்களின் உணவுப் பழக்கமாக இருந்து வந்தது. ஆனால், இப்போது பழைய சோறு கூட ரெஸ்டாரெண்ட் மெனுவில் இடம் பிடித்து விட்டது.












