கொரோனா வைரஸின் தாக்கமானது, சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியம் ஆகியவை தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.
புதுச்சேரி உழவர்கரை நகராட்சியின் சார்பில் 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.
மலிவு விலை உணவகங்கள் என்ற பெயரில் சென்னை மாநகராட்சியால் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே அம்மா உணவகங்கள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டன. இன்றைக்கு சென்னை மாநகராட்சி முழுவதும் 400-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் உள்ளன.
வீட்டில் சமைத்து சாப்பிட்டால் நம்மை நோய்கள் அண்டாது என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், வீட்டில் சமையல் செய்தாலும் நமக்கு ஆயுள் கூடும் என்று சொல்கிறார் #Devi Somnath என்ற முகநூல் நண்பர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளதால் உணவு விநியோகத்தை ஒருங்கிணைக்கும் பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளன. இதனால் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்படுவது மட்டுமின்றி, யாருக்கும் பயனின்றி உணவும் வீணாகிறது.
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பு மருந்துகள் ஏதும் இல்லை. இந்த நிலையில் இந்த கொடூர வைரஸ் பரவுவதில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள எதிர்ப்பு சக்தி மிக்க உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் ஊரடங்கு வரும் மே 3-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் வாழ்வாரத்துக்காக இடம் பெயர்ந்து நடுவழியில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உணவு தானியம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக , முடங்கி இருக்கும் இந்திய நகரங்களில் எங்கு உணவு கிடைக்கும், இரவு தங்கும் இடம் கிடைக்கும் என்ற தகவல்களை எளிதாக அறிய மத்திய அரசுடன் இணைந்து கூகுள் நிறுவனம் தகவல்களை வெளியிடுகிறது.
தூத்துக்குடியில் ஆதரவற்றோர்களுக்கு, அந்த தொகுதியின் எம்.பி-யும் முன்னாள் முதல்வர் மறைந்த மு.கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் ஏற்பாட்டில் உணவு வழங்கப்படுகிறது.
ஏப்ரல் 7-ம் தேதி என்பது உலகம் முழுவதும் உலக ஆரோக்கிய தினமாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியிருக்கும் நிலையில் இன்றைய ஆரோக்கியதினம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா விழிப்புணர்வுக்காக ஒளியேற்றினர். ஆனால், பசியால் வாடுகின்றவர்கள் வீட்டில் வயிறுதான் எரிந்தது.












