குளிர் மற்றும் மழைக் காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகள்

அனைத்துப் பருவகாலங்களிலும் ஒரே மாதிரியான உணவை உட்கொள்வது உடல் நலத்துக்கு ஏற்றதாக இருக்காது. கொளுத்தும் வெயிலில் கொதிக்கும் தேநீர் அல்லது காஃபி சாப்பிடுவது சிலருக்கு உடல்நலக்கோளாறை ஏற்படுத்தி விடும். அதே போல குளிர்காலங்களில் மிக குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட்டாலும் உடல்நலக்கோளாறு ஏற்படும்.

உணவு முறைகளிலேயே குளிர்காலத்தில் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கலாம்

அதிக குளிர், அதிக கோடைகாலங்களில் நோயாளிகள் எப்போதுமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வானிலை மாற்றத்தால், உடலில் மாறுதல்கள் ஏற்படக் கூடும். குறிப்பாக குளிர்காலத்தில் சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்களை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

பிரதமர் மோடி என்ன உணவுகள் சாப்பிடுகிறார் என்று தெரியுமா?

பிரதமர் மோடிக்கு பிடித்தமானது சைவ உணவுதான். சைவ உணவிலும் குறிப்பாக குஜராத் மாநிலத்தின் பாரம்பர்ய சைவ உணவுதான் அவருக்குப் பிடிக்கும்.

2022ம் ஆண்டு முதல் இதையெல்லாம் கவனித்து உணவுப் பொருட்களை வாங்குங்கள்

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம்தான் நாடு முழுவதும் விற்பனை ஆகும் உணவுப் பொருட்களின் தரத்தை சோதனை செய்கின்றது. உணவகத்துக்கு, ரெஸ்டாரெண்ட்களுக்கும் இவற்றின் அனுமதியைப் பெற வேண்டியது முக்கியம். அதே போல பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள் தரநிலைப்படி இருக்கின்றன என்று குறிப்பிடப்பட வேண்டியதும் முக்கியம்.

மூக்குப் பிடிக்க சாப்பிட்டு விட்டால் என்ன செய்வது?

வயிற்றில் கொஞ்சம் இடம் இருக்கும் வகையில்தான் எப்போதும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மூக்குப்பிடிக்க அல்லது வயிறு முட்ட சாப்பிடக் கூடாது என்றும் நமது முன்னோர்கள் அறிவுரை சொல்கின்றனர்.

பன், பிரட், பிஸ்கெட்தான் காலை உணவு என்று சொல்பவர்கள் இதைப் படியுங்கள்

அவசரத்துக்காக கடையில் கிடைக்கிறது என்று பன், பிரட் போன்ற பேக்கரி உணவுகளை நீங்கள் சாப்பிடும்போது உங்கள் உடம்புக்கு நீங்களே தீமையை காசு கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

நார் சத்து உணவுகளை உண்பதால் என்ன நன்மைகள் தெரியுமா?

நீங்கள் நார்சத்துகளை குறைவாக எடுத்துக் கொண்டாலும், தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொண்டாலும் வயிற்றில் உப்பிசம் ஏற்படும். ஜீரண சக்தி பாதிகப்பபடும்.

தூக்கமின்மையை அதிகரிக்கும் உணவுகள்

தூக்கமின்மைக்கு முக்கியமான காரணம் நமது மனதுதான். நமது மனம் ஆரோக்கியமாக இருந்தால், தூக்கம் என்பது தானாக வரும். சில நேரம் நாம் உண்ணும் உணவு கூட தூக்கமின்மைக்கு முக்கிய காரணியாக இருக்கலாம்.

ஒரு ரூபாய்க்கு இட்லி, 10 ரூபாய்க்கு மதிய உணவு

இந்த கட்டுரைக்கு வைக்கப்பட்டிருக்கும் இப்படியான தலைப்பை படிக்கும்போதே பலர் நாம் என்ன சொல்ல வருகின்றோம் என்பதை புரிந்து கொள்வார்கள். நாம் இந்த கட்டுரையில் எழுத இருப்பது கோவை சாந்தி கியர்ஸ் மலிவு விலை உணவகம் குறித்துத்தான்.

பசியை போக்கும் ஒரு புரட்சி திட்டம்....

உலகம் விரல் நுனியில் இருக்கும் இந்த டிஜிட்டல் உலகில்தான் உலகில் கோடிக்கணக்கானோர் தினமும் பசியோடு உறங்கச்செல்லும் அவல நிலையும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த கொரோனோ தொற்று காலம் மேலும் பலரை பட்டினி போட்டிருக்கிறது. மேலும் பலரை ஏழ்மையை நோக்கித் தள்ளி இருக்கிறது.

தேனில் கலப்படம் செய்த நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்க உணவுப் பாதுகாப்புத்துறைக்கு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு அறிவுறுத்தல்

தேன் என்பது இயற்கையின் அற்புதமான கொடையில் ஒன்று. இனிப்பு சுவையுடன் ஏராளமான சத்துகளையும் தேன் கொண்டுள்ளது. தேன் உடல் வலிமையைக் கொடுக்கும். கண்பார்வை, இதயநோய்கள் குணம் அடையவும் தேன் உதவும். ஜீரணசக்திக்கும் தேன் உதவுகிறது.

அன்பையும் சேர்த்து பரிமாறும் மடிப்பாக்கம் கிருத்திகா மெஸ்

சுத்தமான சுவையான வீட்டு சாப்பாடு என்று அறிவுப்புடன் உள்ள உணவகங்கள் நூறு சதவிகிதம் வீட்டு சாப்பாடாக இருப்பதில்லை. வெறும் விளம்பரத்துக்காக வீட்டு சாப்பாடு என்ற வார்த்தையை இணைத்திருப்பார்கள். ஆனால், உண்மையிலேயே வீட்டில் சாப்பிடுவது போன்ற ஆரோக்கியமான சைவை உணவை சாப்பிட வேண்டும் என்றால் மடிப்பாக்கம் கிருத்திகா மெஸ்ஸுக்கு செல்ல லாம்.