உலகம் முழுவதும் அக்டோபர் ஒன்றாம் தேதியை சைவ உணவு தினமாக கடைபிடிக்கின்றனர். அசைவ உணவானாலும், சைவ உணவானாலும் அதன் அதன் தன்மையில் நிறைகுறைகள் இருக்கின்றன. சைவ உணவில் உடலுக்கு ஆற்றலான சத்துகள் போதுமான அளவுக்கு இருக்கின்றன. சைவம் உண்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்று பார்க்கலாம்.
இளநரை வருவதற்கு நமது உணவு பழக்க வழக்க மாற்றங்கள், விரைவான உலகின் விரைவான செயல்பாடுகள் ஆகியவற்றின் விளைவாக நமது உண்ணும் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள்தான் காரணம்.
இதயத்துக்கு மட்டுமின்றி குடல் ஆரோக்கியத்துக்கும் வாதுமை நல்லது. குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வாதுமை உதவுகிறது. குடலில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் வளர்வதை உறுதி செய்யும் வாதுமையானது. குடலின் செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது.
உணவு என்பது உடல் ஆரோக்கியத்துக்கானது. பசித்தபோது உணவு உண்ண வேண்டும் என்றுதான் நம் முன்னோர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியமாக உடல் நலத்தை நாம் பேண வேண்டும் எனில் ஊட்டசத்துள்ள உணவுகளை நாம் அவசியம் உண்ண வேண்டும்.
மழைகாலத்திலதான் தொற்று நோய்கள் அதிக அளவு பரவுகின்றன. குறிப்பாக கொரோனா தொற்று போன்ற நோய்கள் நம்மை அச்சுறுத்தி வரும் நிலையில் மேலும் அதிக பாதுகாப்புடனும், உடல் நலத்தை பேணும் வகையிலும் இருக்க வேண்டும்.
வெள்ளை வெளேர் என்று இருக்கும் பட்டை தீட்டபட்ட அரிசியை சாப்பிடால், அதனால் நீரழிவு வரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அண்மையில் வெளி வந்த ஆய்வும் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.
கொரோனா பெருந்தொற்று கர்ப்பிணி பெண்கள் முதல் முதியவர்கள் வரை அனைரையும் பாராபட்சம் இன்றி தாக்கி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மிகவும் அதிக பாதிப்புக்கு உள்ளாக நேரிடுகிறது. சிலர் இறந்தும் போகின்றனர். ஆனால், அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முதியவர்கள் பலர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கின்றனர்.
இந்த உலகில் பிறக்கும் எல்லோரின் முதன் உணவு தாயிடம் இருந்து இயற்கையின் கொடையாக கிடைக்கும் தாய்பால்தான். தாய்பாலை விடவும் வேறு எந்த உணவும் பிறந்த குழந்தைக்கு ஈடில்லை. சுத்தமான, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட தாய்பாலை பிறந்த குழந்தைகள் குடிக்கும்போது அந்த குழந்தைகளுக்கு சிறுவயதில் ஏற்படும் பல உடல் நலக்குறைவுகள் முற்றிலும் தடுக்கப்படுகின்றன.
மது எந்தவகையிலும் ஆரோக்கியமான வாழ்வுக்கு ஏற்ற உகந்த உணவுப் பொருளாக அல்லது திரவமாக இருந்ததில்லை. மது குடித்தால் கொரோனா கிருமிகள் செத்து விடும் என்று மார்ச் மாதம் ஒரு தவறான தகவல் சமூகவலைதளங்களில் வலம் வந்தது. அப்போதே இதற்கு உலக சுகாதார நிறுவனம் மறுப்புத் தெரிவித்து இருந்தது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து மிக்க உணவு உட்கொண்டால்தான் உடல் வலிமையாக இருக்கும், உடல் வலிமை பெற்றால்தான் மனநலமும் ஆரோக்கியமாக இருக்கும்.
உடலில் தேவையான அளவு நீர்ச் சத்து இருக்க வேண்டும்.அப்போதுதான் நாம் ஆற்றலுடன் திகழ முடியும். உடல் ஆரோக்கியத்துக்கு உடலில் நல்ல நீரேற்றம் இருக்க வேண்டியது அவசியம்.
கொரோனா தொற்று தாக்கம் காரணமாக, குணம் அடைந்த பின்னரும் சோர்வான தன்மை இருக்கும். சோர்வைப் போக்க உடனடி ஆற்றல் தரும் தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும். கஞ்சி, இளநீர், மோர், பழரசம் போன்ற நீர்ச் சத்து அதிகம் உள்ள பானங்களைக் குடிக்க வேண்டும். அதே நேரத்தில் சர்க்கரை நோய் போன்ற சிக்கல்கள் உள்ளவர்கள் மருத்துவர்கள் அறிவுரைப்படி நீர்ச் சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.












