எளிதாக செரிக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

நாம் உண்ணும் உணவானது நமது உடலுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும். குறிப்பாக நமது உடலின் செரிமான சக்திக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், எளிதாக ஜீரணிக்கும் உணவுகளை நாம் உண்ணுவது மிகவும் அவசியமாகும்.

கொரோனா தாக்கத்துக்குப் பின்னர் உணவகங்களின் சேவைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்

கொரோ பெருந்தொற்று பல தொழில்களில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகளில் முதலாவதாக இருக்கும் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் இடத்தில் இருக்கும் உணவகங்களின் சேவையில் கொரோனாவின் தாக்கத்தால் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஆம்பூரின் உண்மையான சுவையில் பிரியாணி வேண்டுமா?

தமிழகத்தின் உணவு பாரம்பர்யத்தோடு, அந்தந்த ஊரின் பெயரும் ஒட்டிக் கொண்டிருக்கும். ஆம்பூர் என்ற பெயரைக் கேட்டதும் பலருக்கு அந்த ஊருடன் இணைந்த பிரியாணியும் நினைவுக்கு வரும். ஆம்பூர் பிரியாணியின் சுவைக்கு பல தமிழர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர்.

ஸ்விக்கியில் இனி ஸ்டீரிட் ஃபுட்களும் கிடைக்கும்...

சென்னையில் தள்ளுவண்டியில் செயல்படும் உணவகங்கள் எளிய மக்கள், நடுத்தர மக்களின் சொர்க்கமாக திகழ்கிறது. சில தள்ளுவண்டி உணவகங்களின் சுவை பிரபல ரெஸ்டாரெண்ட்களக்கு இணையாகவே இருக்கின்றன. இப்போது தள்ளுவண்டி உணவகங்களை ஸ்விக்கி உணவு டெலிவரி செயலியில் இணைக்கும் முயற்சிகள் தொடங்கி இருக்கின்றன.

அசத்தலான சுவையில் கலவை சாதங்கள்

சாம்பார்,குழம்பு, ரசம், மோர் அல்லது தயிர் என்ற ஒரு காம்போவில் மதிய உணவு உண்டால்தான் சிலருக்கு சாப்பிட்ட திருப்தியே கிடைக்கும். இன்னும் சிலருக்கு சாம்பார் சாதம், ரசம் சாதம், மோர் சாதம் என்று கலவை சாதங்களை வரிசைப்படி உண்பதும் பிடிக்கும். பெரும்பாலானோர் இந்த வரிசைக்குள் அடங்காமல் மதிய நேர பசியைப் போக்க கலவை சாத த்தில் ஏதேனும் ஒன்று அல்லது ஏதேனும் இரண்டை சாப்பிடுவதும் வழக்கம்.

இயற்கை உணவு சுவையில் அசத்தும் தி.நகர் கிரீன் கஃபே

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே இயற்கை உணவு முறை மிகவும் பிரபலம் ஆகிவருகிறது. குறிப்பாக கொரோனா தொற்று பரவல் காலத்தில் இயற்கை உணவு மீது மக்களுக்கு கூடுதல் பிரியமும், நேசமும் உருவாகி இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் அந்த அளவுக்கு இயற்கை உணவுப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இயற்கை உணவுப் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டவை என்ற வகையில் மக்களிடம் இப்போது கூடுதல் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் அஜினோ மோட்டோவின் விற்பனை எப்படி இருக்கிறது?

ஜப்பான் நிறுவனமான அஜினோ மோட்டோ உலகில் சீனா, தாய்லாந்து, கொரியா, ஜப்பான், வியட்நாம், மலேசியா, மெக்சிகோ, ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட 130 நாடுகளில் விற்பனை ஆகிறது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு தாய்லாந்து நாட்டில் உள்ள தொழிற்சாலையில் அஜினோ மோட்டோ தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2003 ம் ஆண்டில் இருந்து அஜினோ மோட்டோ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 64,000 டன் அஜினோ மோட்டோ விற்பனை ஆகிறது.

கொரோனா கொடுத்த வாய்ப்பு... வீட்டுசுவையுடன் உணவு விற்கும் பொறியியல் பட்டதாரிகள்...

சென்னையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகளான மணிகண்டன், வர்ஷா இருவரும் ஏதேனும் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று யோசிக்கின்றனர். அப்போது அவர்களுக்கு வந்த யோசனை ஈவன்ட் மேனேஜ்மெண்ட் தொடங்க வேண்டும் என்பதுதான். ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அந்த தொழில் அவ்வளவாக கைகொடுக்கவில்லை.

அன்னலக்ஷ்மியின் அருமையான குருமா

உணவு சமைப்பதில் கைபக்குவம் என்பதுதான் ஒவ்வொருவருக்கும் இன்னொருவருக்குமான வித்தியாசத்தை வெளிப்படுத்தும் அம்சமாகும். மாம்பலம் அன்னலக்ஷ்மி என்ற உணவகம் மேற்கு மாம்பலம் ரயில்வே ரோட்டை ஒட்டி குப்பையா தெருவில் முதன் முதலில் திறக்கப்பட்டது.

கல்லீரலை பாதுகாக்கும் மூன்று முக்கிய உணவுகள் என்னென்ன தெரியுமா?

கல்லீரலில் தான் உணவு செரிமானம் ஆகிறது. குளுக்கோஸ் ஆக உருவாக்கப்படுகிறது. உடலின் நச்சுத்தன்மை நீக்கப்படுகிறது. உணவை முறையாக செரிப்பதற்கு உதவுவதுடன், நுண்ணூட்ட சத்துகளையும் சேமித்து வைக்கிறது. கல்லீரல் செயல் இழப்பு என்பது கல்லீரல் நோய்களை உருவாக்கும். வளர்சிதை மாற்றத்தில் கோளாறு ஏற்படும். டைப் 2 சக்கரை நோய் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

அஜினோ மோட்டோ ஆரோக்கியமானதா?

உப்பு போல உணவில் சுவையை அதிகரிக்கக் கூடிய மோனோசோடியம் குளுட்டமேட் என்ற எம்எஸ்ஜி என்று சுருக்கமாக அழைக்கப்படும் பொருள்தான் அஜினோ மோட்டோவில் உள ளது. அஜினோ மோட்டோ என்பது ஒரு ஜப்பானிய பெயராகும். இந்த பெயரை ஜப்பானில் அஜி னோ மோட்டோ என்று சொல்கிறார்கள் இதன் அர்த்தம் ஜப்பானிய மொழியில் ருசியின் சாரம் என்பதாகும்.

உலக காஃபி தினம் உற்சாக தரும் காஃபி பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வோம்...

நாள் ஒன்றுக்கு மூன்று முறை காஃபி குடிப்பவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் காரணமாக உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவருக்கு உடனடியாக ஆற்றல் தரும் திறனை அளிப்பதில் காஃபி முக்கிய பங்கு வகிக்கிறது.