பத்து ரூபாய்க்கு சட்னி, 40 ரூபாய்க்கு சாம்பார்,ரூ.110-க்கு நாலு பீசுடன் நாட்டுக்கோழி குழம்பு

வெறும் சோறு மட்டும் வடித்துக் கொண்டால் காய்கறி, குழம்பு வகைகளை கடையில் வாங்கிக்கொள்ளலாம் என்ற பழக்கம் அதிகரித்துள்ளது. இந்த தேவையைப் பூர்த்தி செய்கிறது இப்போது வடபழனியில் உள்ள அம்மா செய் கறி பாயிண்ட் எனும் சட்னி, சாம்பார், குழம்பு வகைகள் விற்கும் கடை தொடங்கப்பட்டுள்ளது.

ஜெயின் அறக்கட்டளையின் ஒரு ரூபாய் உணவு

சென்னையில் உள்ள ஜி.என்.செட்டி தெருவில் இருக்கும் ஜெயின் கோவிலில், ஜெயின் அன்னபூர்ணா டிரஸ்ட் நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது. இந்த நிறுவனத்தின் சார்பில் தினமும் 250 பேருக்கு ஒரு ரூபாய் விலையில் உணவு வழங்குகின்றனர்

கண் பாதுகாப்புக்கு ஏற்ற நான்கு முக்கிய உணவுகள் என்னவென்று தெரியுமா?

கண்களை ஆரோக்கியமாக பாதுகாப்பதில் உணவுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஸ்மார்ட் போன், டேப்லெட், டிவி என்று விதம் விதமான ஒளி சிந்தும் திரைகளை பார்ப்பதால் நம் கண்கள் இப்போது சீக்கிரம் களைத்து விடுகிறது. கண்களை பாதுகாக்க கீழ் கண்ட உணவுகளை அவசியம் நீங்கள் உண்ண வேண்டும்.

உணவு வரலாற்றில் இடம்பெற்றுள்ள மதுரை முனியாண்டி விலாஸ்

மதுரை முனியாண்டி விலாஸ் என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கு நாவில் எச்சில் ஊறும். ஆம் தென் தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரையில் அசைவ உணவுக்கு பெயர் பெற்ற உணவகமாக மதுரை முனியாண்டி விலாஸ் திகழ்கிறது. மதுரைக்கு அருகில் இருக்கும் வடக்கம்பட்டி கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்களால் இந்த அசைவ உணவின் சுவை இன்றளவும் உலக உணவு வரலாற்றில் நிலைத்திருக்கிறது.

முடி ஆரோக்கியத்துக்கு இந்த உணவுகள் எல்லாம் முக்கியம்...

முடி உதிர்தல், வழுக்கை என்பது இப்போதைய காலகட்டங்களில் அதிகம் காணப்படும் பிரச்னையாக இருக்கிறது. முடிதானே என்று யாரும் சாதாரணமாக நினைப்பதில்லை. அது வயது, தோற்றத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. கருகருவென அழகிய முடி வலுவானதாக இருப்பதையே பலரும் விரும்புகின்றனர். ஆனால், எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை. இதனால்தான் வழுக்கை தலையில் முடி வளரவும், முடி உதிர்வை தடுப்பதற்கான மருந்து பொருட்களும் அதிக அளவில் விற்பனை ஆகின்றன.

அசைவ குழம்புடன் ஐந்து ரூபாய்க்கு புரோட்டா

உணவு சேவை என்பதே ஒரு மகத்தான சேவைகளில் ஒன்று. உணவு விடுதி நடத்துவோர், மெஸ் நடத்துவோர், ரெஸ்டாரெண்ட் நடத்துவோர் உணவு சேவையின் அங்கமாக திகழ்கின்றனர்.

இந்த பொருட்களை எல்லாம் பிரிட்ஜில் வைக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

பிரிட்ஜில் வைத்தால் கெட்டுப்போகாது என்ற எண்ணம் நம்மிடம் அதிகம் வளர்ந்து விட்டது. அந்த எண்ணம் உண்மையல்ல. சில பொருட்களை பிரிட்ஜில் வைக்கக்கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான சைவ உணவுகளுக்கு இதையெல்லாம் சாப்பிடுங்கள்...

நமது உடல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் பி, மற்றும் இ ஆகியவை அத்தியாவசியமாகத் தேவைப்படும் சத்துகளாகும். இது தவிர நார் சத்து, தாதுக்களும் நமது உடலுக்கு தேவையானவையாகும். சரி இவையெல்லாம் எந்த உணவில் இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். பழுப்பு அரிசி, ஓட்ஸ், பார்லி, சோளம், கம்பு, கோதுமை, கம்பு, திணை, கேழ்வரகு போன்றவற்றில் நாம் இங்கு குறிப்பிட்ட அனைத்து சத்துகளும் உள்ளன. இந்த முழு தானிய உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

உளுந்தங்களி சாப்பிட்டால் என்ன பலன்கள் தெரியுமா?

​உளுந்தம் பருப்பில் ஆரோக்கியமான பல சத்துகள் உள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் கால்சியம், புரதம்,இரும்புச்சத்து முதன்மையாக இருக்கின்றன. இவற்றுடன் எளிதாக ஜீரணுத்துக்கு உதவும் நார்ச்சத்து, நல்ல கொழுப்பு, எல்லாவிதமான தாதுக்கள், பி-காம்ப்ளெக்ஸ், வைட்டமின்-‘ஏ’ ஆகியவையும் உளுந்தில் இருக்கின்றன.

ஆராக்கீரையில் ஆஹா எவ்வளவு சத்துகள் தெரியுமா?

ஆராக்கீரை அல்லது ஆலக்கீரை என்பது செங்குத்தாக வளர்ந்த தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட மிகவும் சிறிய நீர் தாவரம். நீர் நிலைகளிலும் வாய்க்கால்களிலும் தானே வளர்வது. இதன் இலை மருத்துவ பயனுடையது. ஆரோக்கியமானது.

பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

பப்பாளி... மிக சாதாரணமாக கிடைக்கும் பழங்களுள் ஒன்று. பப்பாளியில் ஜீரணத்தை தூண்டும் சக்தி உள்ளதால் அசைவ உணவு சாப்பிடுகிறவர்கள் பப்பாளி பழம் சாப்பிடுவதன்மூலம் பலன் கிடைக்கும்.