இயற்கை வேளாண் விளை பொருட்கள் சென்னையில் கிடைக்கும்…

வணக்கம் நண்பர்களே, நாங்கள் எங்கள் கிராமத்திலிருந்து கடலை எண்ணெய் மற்றும் நல்ல எண்ணெய், தேங்காய் எண்ணெய், மஞ்சள் தூள், நாட்டு சர்க்கரை, பனை கருப்பட்டி, பாரம்பரிய அரிசி ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்கிறோம்.

பேக்கரி உணவுகளை காலையில் உண்ண வேண்டாம்…

அவசரத்துக்காக கடையில் கிடைக்கிறது என்று பன், பிரட் போன்ற பேக்கரி உணவுகளை நீங்கள் சாப்பிடும்போது உங்கள் உடம்புக்கு நீங்களே தீமையை காசு கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

தூக்கமின்மை பிரச்னையும், அதற்கான தீர்வும்

தூக்கமின்மைக்கு முக்கியமான காரணம் நமது மனதுதான். நமது மனம் ஆரோக்கியமாக இருந்தால், தூக்கம் என்பது தானாக வரும். சில நேரம் நாம் உண்ணும் உணவு கூட தூக்கமின்மைக்கு முக்கிய காரணியாக இருக்கலாம்.பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை நிறைந்த உணவுகள் அதிகமாக உண்பதால் இரவு தூக்கம் கெடும்.

நல்ல தூக்கத்திற்கும், எலும்புகளை உறுதியாக்கவும் தேன் முருங்கை பிசின்

முருங்கை என்றாலே இரும்புச்சத்தும் புரதத்சத்தும் கால்சியமும் தான் முக்கிய சத்துக்களாக பெரும்பாலானோர் நினைவில் வரும். பொதுவாகவே அசைவ உணவுகளில் இரத்தத்தில் அதிக இரும்புச்சத்து இருக்கும்.

‘நலமும் நளபாகமும்…’மரு.விக்ரம்குமாரின் தொடர்…

நலமும் நளபாகமும்…’ என்ற தலைப்பில் சித்தமருத்துவர் விக்ரம்குமார் எழுதும் கட்டுரை நல்ல சாப்பாடு மாத இதழில் தொடராக வெளிவருகிறது. வாய்ப்பு இருப்பவர்கள் ‘நல்ல சாப்பாடு’ இதழை வாங்கிப் படிக்கலாம்.

ஈரோடு மாநகரில் வரும் 26ம் தேதி முருங்கை பயிரிடுதல், மதிப்புக்கூட்டல் பயிற்சி

செஞ்சோலை அமைப்பு நடத்தும் முருங்கை பயிரிடுதல் & மதிப்புக்கூட்டல் பயிற்சி ஈரோடு மாநகரில் வரும் 25.09.2022 ஞாயிறு அன்று காலை 09.30 மணி முதல் - மாலை 04.30 மணி வரை நடைபெற உள்ளது.

பற்கள், ஈறுகள் வலிமையாக இருக்க மீன் உணவுகள் உண்ணலாம்..

நமது உடலில் ஆற்றல் நிலைத்திருக்க உணவு முக்கியம். உணவை மென்று நம் வயிற்றுக்கு அனுப்புவதில் முக்கிய பங்கு வகிப்பது பற்கள்தான். பற்கள் ஆரோகியமாக இல்லை எனில் அது பல்வேறு நோய்களுக்கு அறிகுறியாக இருக்கலாம்.

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் உணவுகள்

சர்க்கரை நோயாளிகள் அல்லது உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். சில உணவுகளை உண்பதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியின் வெற்றிக்கதை

திண்டுக்கல் நகரம் பூட்டு தயாரிப்புக்கு மட்டுமின்றி, தலப்பாகட்டி பிரியாணிக்கும் புகழ் பெற்றது. திண்டுக்கல் ஆர்.எஸ்.சாலையில் 1957-ம் ஆண்டு நாகசாமி நாயுடு என்பவர் ஆனந்த விலாஸ் பிரியாணி என்ற பெயரில் உணவகம் ஒன்றை ஆரம்பித்தார்.

உலக ரோஜா தினத்தில் புற்றுநோயாளிகளின் நலனுக்காக சிந்திக்கலாம்…

ஆண்டு தோறும் செப்டம்பர் 22ம் தேதியை உலக ரோஜா தினம் என்ற பெயரில் புற்றுநோயாளிகளின் நலனுக்கான தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆவின் பால் பாக்கெட்டுக்குள் ஈ போனது எப்படி?

தாய்பாலுக்கு இணையாக ஆவின் பாலை கருத வேண்டும். தாய்பாலை போல தூய்மையாக தயாரித்து வழங்குகின்றோம் என்று அடிக்கடி ஆவின் அதிகாரிகள் சொல்வதுண்டு. ஆனால், ஆவினில் அடுக்கடுக்கான புகார்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ரெடிமேட் இட்லி, தோசை மாவு பாக்கெட்கள் ஆரோக்கியமானதா?

கடைகளில் பாக்கெட்களில் விற்கப்படும் ரெடிமேட் தோசை மாவு, இட்லி மாவு வாங்கி எளிதாக வேலையை முடிப்பதை விட்டு விட்டு, அரிசியை ஊறவைத்து அதை கிரைண்டரில் அரைத்து என மிகவும் கஷ்டப்பட்டு உணவு தயாரிக்க வேண்டுமா? என்ற அலுப்பும், சலிப்பும் பலருக்கு ஏற்பட்டுவிட்டது.