கரூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயிகள் முருங்கை பயிரிடுவது அதிகரித்து வருகிறது. முருங்கை மதிப்புக்கூட்டு பொருட்களும் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் சந்தைப்படுத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.
களப் பயிற்சி இல்லாமல் வேளாண்மையில் இறங்குவது நீரில் இறங்காமல் நீச்சல் கற்றுக்கொள்வதைப் போன்றது. ஆயினும் பலருக்கு ஆர்வமூட்டவும், அறிமுகம் செய்யவும், அறிவியல் விளக்கங்கள் தரவும் அடிப்படையான உரைக்கோவைகள் (Lecture Series) தேவைப்படுகின்றன.
இயற்கை மீது அதீத ஈடுபாடு ஏற்பட்டால் அது என்ன செய்யும்.....!? நல்ல சம்பளத்தில் பார்த்துவந்த மென்பொருள் வேலையை விட வைக்கும். விவசாயம் பார்க்க வைக்கும், சத்துமாவு தயாரிக்க வைக்கும், கூந்தல் எண்ணை காய்ச்ச வைக்கும்.இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார் கலைமகள்.
ஒரு உணவு விடுதியை திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் கிராமத்து இளைஞர் ஒருவரும் அவர் தாயும் நடத்தி வருகின்றனர். தென்கோடி பாக்கம் எனும் கிராமத்தை சேர்ந்த இளைஞர் பூவரசன், தனது தாயுடன் சேர்ந்து உணவின் விலை உங்கள் விருப்பம், பணம் இல்லையெனினும் பசியாறிவிட்டு செல்லலாம் என்று எழுதி வைத்து உணவகத்தை நடத்தி வருகின்றார்.
குளிர் காய்ச்சல், இருமலுடன் காய்ச்சல், வாந்தி பேதியுடன் காய்ச்சலுக்கு குளிகை அல்லது பற்ப செந்தூரமே மருந்து. நோய்களுக்கு இறுதியான மருந்து செந்தூரமே (பஸ்பம்). செந்தூரம் தயாரிக்க பயன்படும் மருந்துகள் அனைத்தும் இன்று வெடி மருந்தாக பாயன்படுத்தப்படுகிறது
தென்காசி மாவட்டம் பொதிகைச் சோலையில் இரண்டு நாள் அறிவியல்முறை இயற்கை வேளாண்மைப் பயிற்சி இனிதே நிறைவுற்றது.
வெங்காயம்னாலே கிண்டலா சொல்வாங்க. பெரியார் எப்பவுமே கடவுளையும், மதத்தையும் வெங்காயம்னுதான் சொல்வார். வெங்காயம்னா விதை இல்லாதது, வெறும் சதைனு சொல்வார். அதுமட்டுமில்ல வெங்காயம்னா அதுக்கு பொருள் வெறும் காயம், உயிரற்ற உடல்னு சொல்லிக்கிட்டே போகலாம்.
சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவின்(IITM Research Park) தொழில்முனைவோருக்கான ஆதரவு மையத்தின் மூலம் சிறுதானியங்களை மையமாக வைத்து தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வாக “குக்காதான்”, சிறுதானிய சமையல் போட்டி நடைபெற்றது.
குழந்தைகளுக்கான நிகழ்வின் வெற்றியை தீர்மானிப்பது அவர்களின் உற்சாகமான பங்கெடுப்பும் ,நிகழ்வின் சாரத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டதற்கான அடையாளமாக அவர்கள் கேட்கும் கேள்விகளும் தான் .
காலையில் இஞ்சி கடும் கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் ஒரு மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும் கோலை விசி குலாவி நடப்பானே கடுக்காய் சாப்பிட்டால் நெடுகால் வாழலாம் என்று சித்தரகள் சொல்வார்கள். கடுக்காயில் அந்த அளவுக்கு எண்ணற்ற நன்மைகள் உள்ளன.
முருங்கையில் அனைத்து பொருட்களுமே உண்ணக்கூடியவை. சத்து நிறைந்தவை. முருங்கையில் எண்ணற்ற மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. முருங்கையை பல வகைகளில் மதிப்புக்கூட்டி நாங்கள் தயாரித்த ,முருங்கை பிசின் , முருங்கை எண்ணெய், முருங்கை இலைப்பொடி , முருங்கை பூப்பொடி. ஆகியவை கிடைக்கும்.












