கோவை மாவட்டத்தின் கறிசோறும், விரதமும்

கோவை குடியானவர்களும், அவர்களைச் சார்ந்து வாழும் பிற சமூகக் குடிகளும் இறைச்சி சாப்பிட தேர்ந்தெடுத்த நாள் ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளே. முக்கியமாக ஞாயிறு மட்டும்தான் கறி நாள். வீட்டுக்கு வீடு கறி மொளகு அம்மி, ஆட்டாங்கல்லில் அரைக்கும் சத்தம் கடமுடா என்று ஏழூருக்கு கேட்கும்.

உடல் நலத்துக்கு தேவையான சத்துகள் கொண்ட வாழை இலை, வாழைப்பூ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…

வாழைப்பூவைப்பத்தி எல்லோருக்கும் தெரியும். ஆனா எத்தனைபேருக்கு அந்த பூவை பறிச்சி சமைக்கத்தெரியும்? கிராமத்துல இருக்கற சிலபேருக்குக்கூட எப்பிடி? என்ன செய்யணும்னு தெரியல. தெரிஞ்சவங்க, தெரியாதவங்க எல்லோருக்கும் சொல்றேன்.

மாட்டுக்கறி உண்பதற்கு பிறரின் ஒப்புதல் தேவையா?

தண்ணீர் குடிப்பது எவ்வளவு இயல்பானதோ அவ்வளவு ஒருவர் மாட்டுக்கறி உண்பது. தண்ணீர் குடிப்பதற்கு பெரும்பான்மையினரின் அங்கீகாரத்தை பெறுவது எவ்வளவு அபத்தம் அவ்வளவு அபத்தம் மாட்டுக்கறி உண்பதற்கு பிறரின் ஒப்புதல் அங்கீகாரம்.

இயற்கையோடு இணைந்த தற்சார்பு வாழ்வியலின் அனுபவம்…

சரவணன் கிருஷ்ணன் அவர்களின் தற்சார்பு வாழ்வியல் அனுபவத்தை அண்மையில் நேரில் கண்டேன். அண்மையில்தான் அவர் அந்த தென்னந்தோப்புக்குக் குடிபெயர்ந்திருந்தனர். களிமண்ணில் அடுப்பு அமைத்து சாணி கொண்டு பூசி மண்சட்டியில் பருப்பும் களியும் சமைத்து ‍அவர்கள் எனக்குப் பரிமாறினர்

வெள்ளரி, வெண்டைக்காயில் உள்ள உடல்நல பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்

நாம் வாழும் சூழலில், நம் அருகாமையில் விளையும் காய்கறிகள், பூக்கும் பூக்கள் அனைத்துமே நமது வாழ்க்கையின் உடல்நலத்துக்கு உகந்தவைதான். இவையெல்லாம் மனிதர்களுக்கு இயற்கை அளித்த கொடைதான்

ரத்த‍ ஓட்ட‍ம் சீராவது முதல் மூட்டுவலிக்கு தீர்வு வரை மண்குளியலின் மகத்துவம்

சேத்தாண்டி வேஷம் என்பதைத்தான் வெளிநாடுகளில் மண்குளியல் என்று செய்கின்றனர். மண்குளியல் எடுத்துக் கொள்வதால் நம் உடலின் ஆரோக்கியம் மேம்படும் என்பது உண்மை. இங்கே சித்த‍மருத்துவர் திரு.விக்ரம் குமார் மண் குளியல் பற்றி எழுதியுள்ள‍ கட்டுரையைப் பார்க்க‍லாம்.

இயற்கையாக பழுத்த மாம்பழங்கள், கருப்பு கவுனி அரிசி விற்பனைக்கு…

இயற்கை வேளாண் விற்பனை சந்தை எனும் இந்த பக்கத்தில் இயற்கை விவசாயிகள் விளைவிக்கும் பொருட்கள் பற்றிய தகவல்கள் கட்டணமின்றி வெளியிடப்படும். தகவல்களை 7358314996 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்யவும்.

ஏழை, எளியவர்களின் பசியைப் போக்கும்…இட்லி பாட்டிக்கு பரிசாக கிடைத்த வீடு!..

கோவை மாவட்டத்தின் மலைக் கிராமமான வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த கமலம்மாள் என்ற மூதாட்டி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ரூபாய்க்கு இட்லி சுட்டு விற்பனை செய்து வருகிறார். இப்போதுதான் ஒரு இட்லி விலை ஒரு ரூபாய் என்று விற்பனை செய்கிறார். 50 ஆண்டுகளுக்கு முன்பு இட்லி விற்க தொடங்கும்போது ஒரு இட்லி 25 பைசாவுக்குத்தான் விற்பனை செய்தார்.

முருங்கை விதை, முருங்கை பொடி, முருங்கை எண்ணைய்… முழுமையான பலன்களை தரும் முருங்கை

முருங்கை இலை, முருங்கை காய், முருங்கை பூ என அனைத்துமே உணவுக்காக பயன்படக் கூடிய ஒன்று. இதன் காரணமாக தேவை அதிகரித்து இன்றைக்கு முருங்கை மட்டுமே பயிரிட்டு பலர் லாபம் பெற்று வருகின்றனர். இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து முருங்கை தொடர்பான பொருட்களின் ஏற்றுமதி அதிக அளவு நடைபெற்று வருகிறது.

தருமபுரியில் நாளை தமிழர் மரபுச் சந்தை

தமிழர் மரபுச் சந்தை தருமபுரியில் காவேரி பழத்தோட்டம், பாரதி புரம், மதுராபாய் திருமண மண்டபம் எதிரில் சேலம் பிரதான சாலை முகவரியில் ஞாயிற்றுக் கிழமை 08 - 05 -2022 காலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறுகிறது.

திருநெல்வேலி கை சுத்து முறுக்கு… ஒரு நினைவலை..

திருநெல்வேலியின் அனேக இடங்களில் கை சுத்து முறுக்கு குடிசைத்தொழில் போல பண்ணி கொண்டிருப்பதை பார்க்கலாம். பெரிய கூடத்தில் பத்து பதினைந்து பெண்கள் உட்கார்ந்து கொண்டு முறுக்கு சுற்றுவதை பார்க்க முடியும்.

நெகிழி வரி விதிக்கலாம் பசுமை சாகுல் முன்வைக்கும் யோசனை

மாற்றுவழி கண்டுபிடிக்காத வரையில் நெகிழி பயன்பாட்டை தடுப்பது கடினம். நம் அன்றாட வாழ்வில் நெகிழி இறண்டற கலந்து விட்டது. ஒரு பல்பொருள் அங்காடியை எடுத்து கொண்டால் அதில் 90 சதவிகிதம் பொருட்கள் நெகிழி சட்டை அணிந்தே இருக்கும்.