அனுபவம்... வாழ்க்கையின் மிகச்சிறந்த ஆசான் என்பார்கள். அந்தவகையில் கோவை, ஈரோடு, தர்மபுரி மாவட்டப் பகுதிகளில் இயற்கை விவசாயம் செய்பவர்களின் அனுபவங்களைக் கேட்டபோது மலைப்பாக இருந்தது. ஒவ்வொருவரும் அவர்களுக்குத்தெரிந்த நுட்பங்களை கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுவருகின்றனர்.
ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும்.
பசித்தவர்களுக்கு கிடைக்காததும், பசிக்காதவர்களுக்கு கிடைப்பதும் என்பதாகத்தான் உணவின் அரசியல் உள்ளது. உணவு இந்த உலகத்தை இயக்கும் ஆதாரமாக விளங்குகிறது. ஆனால், இந்த கொரோனா காலக்கட்டத்துக்குப் பிறகு உலகம் முழுவதும் பல கோடிப்பேர் உணவு இன்றி தவிக்கின்றனர். ஒருவேளை கூட உணவு உண்ணாமல் இரவு படுக்கச் செல்லும் பல கோடிப்பேர் இந்த உலகத்தில் உள்ளனர். .
தேனை அதன் இயற்கையான தன்மையில் திரவமாக உண்பது நல்லது என்பது பொதுவான கருத்து. ஆனால், இப்போதைய நவீன உலகில் சிலர் குளிர்சாதனப்பெட்டியில் உள்ள ஃப்ரீசரில் தேனை வைத்து உறைந்த பின்னர் அதனை மிட்டாய் போல சாப்பிடுகின்றனர்.
நம் 'வள்ளுவம் இயற்கை வேளாண் வாழ்வியல் நடுவம் ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணையில் வரும் நவம்பர் 7ம் தேதி முதல் ஒரு மாதம் இயற்கை வழி வேளாண்மை பயிற்சி முகாமை நடத்துகிறது. .
ஜார்க்கண்டின் உணவு அதன் அண்டை மாநிலமான பீகாரிலிருந்து வேறுபட்டதல்ல. ஜார்கண்ட் மாநில மக்கள் உண்மையில் நேர்த்தியான, வித்தியாசமான உணவு முறையை கொண்டுள்னர். குறிப்பாக அந்த மாநில மக்கள் தங்கள் உணவில் கடுகு எண்ணெயை பயன்படுத்துவது வழக்கம். இது உணவுக்கு நறுமணத்தை அளிக்கிறது.
மீன், நண்டு போன்ற கடல் உணவுகள் எப்போதுமே உடல்நலத்துக்கு ஆரோக்கியமானவை. கடல் உணவுகளை சமைக்கும் முறையிலும், அதன் சுவையும், பலனும் கூடுகிறது. கடல் உணவுகளுக்கு என நீங்கள் சிறப்பிடம் கொடுப்பவராக இருந்தால், இந்த ஐந்து சுவையான கடல் உணவு ரெசிபிகளை உண்ண மறந்து விடவேண்டாம்.
மதிப்பு கூட்டலில் அடுத்தக்கட்ட முயற்சியாக நம்முடைய பாரம்பரிய அரிசியினையும் , சிறுதானியங்களையும் வைத்து ஒரு புதிய முயற்சியாக ஃப்லேக்கிஸ் என்ற உணவுப் பொருளை இயற்கை விவசாயி பாலாஜி.சுரேஷ் தயாரித்துள்ளார்.
ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்கள் பலரிடம் சென்று சேர வேண்டும். நேரடியாக விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.
டிஜிட்டல்யுகமாக இந்த உலகம் முன்னேறி வரும் நாளில்தான் தினமும் இரவில் பலர் உணவின்றி பசியோடு உறங்கச் செல்கின்றனர். ஒருவனுக்கு விதிக்கப்பட்ட உணவில் அவனது பெயர் எழுதப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அது உண்மையா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். பலர் தினந்தோறும் பட்டினி கிடக்கும் சூழலில் அன்னத்தை வீணாக்கக் கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அன்னாபிஷேகம் நடைபெற்று முடிந்துள்ள வேளையில் இதனை அனைவரும் அறிந்து கொள்வது முக்கியம்.
வழக்கமான அளவு சிறுதானியங்களை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக் கொள்வதன் வாயிலாக இரும்புச்சத்து குறைபாடு, ரத்த சோகையில் இருந்தும் விடுபட முடியும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஐதராபாத்தை தலைமையிடமாகக் சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம் அரை-வறண்ட வெப்பமண்டலத்திற்கான (ICRISAT) நான்கு நாடுகளில் ஏழு அமைப்புகளின் இது குறித்த ஆய்வுக்கு ஆய்வுக்கு தலைமை தாங்கியது. கண்டுபிடிப்புகள் அக்டோபர் 14 அன்று Frontiers in Nutrition என்ற இதழில் வெளியிடப்பட்டன












